தான் ஒருபோதும் எவருடைய கடிவாளமாகவும் இருக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை கூறியதுடன், தன்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ´நான் பணத்திற்கு அடிமையாக போவதில்லை. மற்றையவர்களின் கடிவாளமாகவும் நான் இருக்க போவதில்லை. என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. மக்களின் இதய துடிப்பை உணவர்தவன் நான். எனது இயல்பான முகமே இதற்கு சாட்சி.

என்னிடம் கவர்ச்சி அரசியல் இல்லை. தலைக்கு டை அடிக்க அவசியம் இல்லை. சில வேளைகளில் நான் சவரம் செய்வதும் இல்லை. மக்கள் அழகாக ஆடை அணிபர்களையா? அல்லது சேவையாற்ற கூடியவரையா விரும்புகின்றனர்? என குறிப்பிட்டார்.

இதேவேளை, இரத்தினபுரி வெலிகேபொல பகுதியில் அமைக்கப்பட்ட மற்றுமொரு உதா கம்மான திட்டம் கடந்த 29 ஆம் திகதி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.