மாலைதீவுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு வந்தவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து, விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே, திங்கட்கிழமை மாலைதீவுக்குச் செல்லவுள்ள பிரதமர், நாடு திரும்பிய பின்னர், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.