இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம்

நாளை (02.09.2019) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.

அமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் திரு.க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், பேராசிரியர் சிறீசற்குணராசா , செந்தமிழ் சொல்லருவி திரு. ச.லலீசன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

நன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றவுள்ளார்.

மேலும், மதியம் 12மணியளவில் தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தானத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அன்னாரின் நினைவாக அங்கு அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளது.