உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, நாளை (02) மீண்டும் கூடவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

விசேட தெரிவுக்குழுவின் காலம் நிறைவடையவிருந்த நிலையில், கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் கடந்த 21 நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.