தேசிய கல்வியியல் கல்லூரிகளில்,  2015/2017 கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4,236 டிப்ளோமாதாரிகளுக்கு,  ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மொழி மூலம்,  1,404  பேருக்கு இதன்போது நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அளுத்கம, அட்டாளைச்சேனை, கொட்டகல ஆகிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமாப் பட்டங்களைப்  பெற்றவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

இதற்கமைய, தமிழ் – 173, இந்து சமயம் – 28, இஸ்லாம் – 23, கிறிஸ்தவம் – 37, மனைப்பொருளியல் – 44, தகவல் தொழில் நுட்பம் – 104, கணிதம் – 69, சங்கீதம் – 38, விளையாட்டும், உடற்கல்வியும் – 67, ஆரம்பக் கல்வி – 327, விஞ்ஞானம் – 122, இரண்டாம் மொழி தமிழ் – 50, சமூகக் கல்வி – 36, விசேட கல்வி – 30, நாடகமும் அரங்கியலும் – 15, விவசாயம் – 49, சித்திரம் – 59, வணிகக் கல்வி – 50, வடிவமைப்பு – 14, நடனம் – 25, மெகானிக்கல் வடிவமைப்பு – 04, நிர்மாண வடிவமைப்பு – 36, இலத்திரனியல் வடிவமைப்பு – 04  என்ற அடிப்படையில் நியமனங்கள்  வழங்கப்படவுள்ளன.