இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இன்று (02) கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிசாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.