ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சரியான தீர்மானமொன்றை எடுக்கும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (03) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சரியான தீர்மானமொன்றை எடுக்கும் என்றார்.