எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை.
இந்த தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.