யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் புத்தளத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 
ஆழியவளை பகுதியில் உள்ள மீனவர்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதற்காக புத்தளம் உடப்பு பகுதியிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் – உடப்பு பகுதியை சோ்ந்த கதிர்காம முத்தையா சிறீகாந்த் (வயது 44) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.