உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் தொடர்பான 97 புலனாய்வு அறிக்கைகள்

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் தாக்குதல் இடம்பெறும் வரை, குறித்த 97 அறிக்கைகள் அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன  உயர் நீதிமன்றில் இன்று (03) தகவல் வெளியிட்டுள்ளார்.