திருக்கோவில், அக்கரைப்பற்று பிரதான வீதி தம்பட்டை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 8 வயதுடைய சதீஸ்குமார் சஞ்சேயன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

குறித்த பிரதேசத்திலுள்ள தமது வீட்டில் இருந்து இன்று காலை சிறுவனின் மாமானார் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சிறுவனின் தாயார், அம்மம்மா ஆகியோரை ஏற்றிக் கொண்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் திருமணவீடு ஒன்றிற்கு சென்று பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி பிரயாணித்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதியின் தம்பட்டை பிள்ளையார் ஆலையத்துக்கு அருகிலுள்ள வீதி வளைவில் முச்சக்கரவண்டிய வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளனதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.