வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.