நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தொடர்ந்தும் தாம் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிப் பதவிக்குரிய சில அதிகாரங்களைக் குறைக்க முடிந்துள்ளது.

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அரசியலமைப்பை பாரிய வகையில் மீறியது. அதனால் 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டிள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு உரிய சில அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதுடன் அது அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்திற்கும், பொறுப்பாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)