கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் இராண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகளுக்காக 28 பாடசாலைகளை பயன்படுத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரையில் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இடம்பெற உள்ளது.

இந்த பணிகளுக்காக பயன்படுத்தும் 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் முழுமையாக மூடப்படுவதுடன் ஏனைய 24 பாடசாலைகளும் பகுதியளவில் மூடப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு ஆனந்த கல்லூரி, கண்டி வித்தியார்த்த கல்லூரி, மாத்தறை மஹனாம கல்லூரி மற்றும் குருணாகல் லக்தாஸ் த மெல் ஆகிய பாசாலைகளே இவ்வாறு குறித்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.