எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நாளை (08) அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறும் சந்திப்பில், சஜித் பிரேமதாச எவ்வித விட்டுக்கொடுப்புகளும் செய்யமாட்டார் என தகவல்கள் வௌியாகியுள்ளன