பங்களாதேஸ் கடற்படையினருக்குச் சொந்தமான “சொமுத்ரா அவிஜான்” என்ற கப்பலொன்று இலங்கை – கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பல் சம்பிரதாய ரீதியாக வரவேற்கப்பட்டதுடன், அதில் வருகைதந்திருந்த அதிகாரிகளும் வரவேற்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பலில் நான்கு நாள்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமாக வருகைதந்துள்ள அதிகாரிகள் உள்ளடங்கலான கடற்படையினர் குழுவினர், இலங்கையில் கடற்படையினரால் நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டி, வேறு சில வேலைத்திட்டங்களில் பங்குகொள்ளவதற்காக வருகைதந்துள்ளதாக, இலங்கை கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருநாட்டு கடற்படையினருக்கும் இடையில் சில பயிற்சிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.