நாடு முழுவதிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் நிதி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பா

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் இக்கண்காட்சிக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர விஜயம் செய்தார்.

கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர், யாழ்ப்பாணம் நகரம் சிறந்த வர்த்தக நகரமாக முன்னாளில் திகழ்ந்தது.

21 ஆம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கு இந்த கண்காட்சி புதிய வணிக அறிவு மற்றும் நிதி வசதிகளைப் பெற உதவும் வழிகாட்டும் என தெரிவித்தார்.

09 வலயங்களின் கீழ் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் காலை 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதில் அரச மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த சுமார் 450 கண்காட்சி கூடங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலமாக பயன்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம