விழிநீர் அஞ்சலி!  -அமரா் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள்

கிளிநொச்சி விவேகானந்த நகரை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட முன்னாள் புளொட் உறுப்பினர் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள் (04.09.2019) புதன்கிழமை மரணமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் கிளிநொச்சி பழைய கச்சேரி ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, நாளை (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இல்லத்தில் இடம்பெறும் கிரியைகளைக் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.