அமைச்சரவையில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்ட்ட தீர்மானத்துக்கு அமைய, தற்பொழுது வெற்றிடமாக உள்ள 4,667 பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக, 45 வயதுகுட்பட்ட,  உள்ளக பயிற்சி, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி,

கால அடிப்படை முறைக்கு அமைவாக, பயிற்சியில் இணைத்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திர​த்துக்கும் அமைச்சரவை நேற்று முன்மினம் (10) அனுமதியளித்துள்ளது.

 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டத்தை பூர்த்திச் செய்துள்ள பட்டதாரிகள் செப்டெம்பர் மாதத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.