யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் புதிய இரண்டு மாடி ஆரம்ப கற்றல் வள நிலைய திறப்பு விழா 09.09.2019 திங்கட்கிழமை முற்பகல் 8.30மணியளவில் பாடசாலையின் அதிபர் திருமதி புஸ்பராணி மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் த.கிருபாகரன், சாவகச்சேரி பிரதேசசபை உபதவிசாளர் செ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்