எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (13) நிறைவுக்கு வருகின்றது.

இன்றைய தினத்துக்குள் காலி மாவட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, 1300 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால் வாக்குச்சீட்டுகள் காலி மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.