ஹெரோயின் போதை பொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்தமை, அவற்றை சூட்சுமாக விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேக நபர்களை பொலிஸ் போதைப் பொருள் பணியகம் கைது செய்தது.

6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத்தால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 7 சந்தேக நபர்களும் 3 குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28.08.2019 ஆம் திகதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளின் பெயர்கள் பின்வருமாறு,

01. ANDUL KASHIF – 13.03.2016 அன்று இலங்கைக்கு 425 கிராம் ஹெரோயின் இறக்குமதி, செய்தமை அவற்றை தம்வசம் வைத்திருந்தமைக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழக்கு எண் 521/2019 அமைய வழக்கு தாக்கல் செய்தது.

02. KHAN ABBAS – 8 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 628 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக நீர்கொழும்பு நீதிமன்றம் 25.04.2016 அன்று வழக்கு எண் 479/2019 அமைய வழக்கு தாக்கல் செய்துள்ளது.

03. IKRAM MUHAMMED – 2017.05.14 அன்று இலங்கைக்கு 973 கிராம் ஹெரோயினை இறக்குமதி செய்தமை, உடைமை மற்றும் கடத்தல் தொடர்பாக நீர்கொழும்பு நீதிமன்றம் 481/2019 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

04. MUHAMMED NADEEM – 26.05.2017 அன்று இலங்கைக்கு 1 கிலோ கிராம் 26 கிராம் ஹெரோயினை இறக்குமதி செய்தமை உள்ளிட்ட உடைமை மற்றும் கடத்தல் தொடர்பாக 453/2019 இன் கீழ் நீர்கொழும்பு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது.

05. QADIR SAHABZADA – கடந்த 07.08.2017 அன்று 136 கிராம் 46 மில்லி கிராம் ஹெரோயினை இறக்குமதி செய்தமை, உடைமை மற்றும் கடத்தல் தொடர்பாக நீர்கொழும்பு நீதிமன்றம் 500/2019 வழக்கு பதிவு செய்துள்ளது.

06. SHAKIR MUHAMMED – இலங்கைக்கு 376 கிராம் 46 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்தமை உடைமை மற்றும் கடத்தல் தொடர் நீர்கொழும்பு நீதிமன்றம், 480/2019 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

07. QADIR FAIZA ALI – 07.08.2017 அன்று இலங்கைக்கு 82 கிராம் ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்தமை அதனை வைத்திருத்தல் மற்றும் கடத்தல் ஆகியவற்றுக்காக நீர்கொழும்பு நீதிமன்றம வழக்கு எண் 500/2019 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது நீர்கொழும்பு சிறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.