நடைபெறவுள்ள தோர்தல் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் (20) ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ளது. 

இதன் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹுல், ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் ஆபேசேகர உள்ளிட்டோரும் கலந்துகொள்வர் என அறிய முடிகிறது.

மேற்படி சந்திப்புக்காக  மாவட்ட செயலாளர்கள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.