சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தீர்மானம் எதுவும் வழங்கவில்லையாயின், புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரங்களிலுள்ள அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக, ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.