கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் விற்பனை பெற்றுக் கொண்டதினூடக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் அசோக் ரங்வலவால், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனப்படையில், இந்திய நிறுவனம் ஒன்றால் டெண்டர் நடைமுறைக்கு மாற்றமாக மோசடி நிதி அறிக்கைகளை சமர்ப்பித்து, அரசாங்கத்துக்கு, டொலர் மில்லியன் கணக்கில் மோசடி செய்ததாக, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவால் குறித்த முறைப்பாடு பொலிஸ் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.