அரச நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தால் வைத்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதன் ஊடாக, ஏதாவது ஒரு விதத்தில் வைத்தியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் புதன்கிழமை (18) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், இன்று (16) இடம்பெறவுள்ள மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.