தாமரை கோபுரம் நிர்மாணத்தின் போது, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற துஷார இந்துனில், குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.