புலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையினர், வட்டு வடக்கு சித்தன்கேணியைச் சேர்ந்த முன்னாள் கழக அங்கத்தவர் நடராஜசர்மா கலியுகவரதன் அவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடமைப்புத்திட்ட வீட்டினை பூரணப்படுத்துவதற்காக அவருக்கு 50,000/- ரூபாவினை நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் மத்தியகுழு உறுப்பினர் அ. கெளதமன் அவர்கள் வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டதோடு ஜேர்மன் கிளையினரின் மேற்படி நிதியுதவியையும் கையளித்தார்.