முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிக்கட்டப் போரில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட்  (Admiral of the Fleet) ஆக பதவியுயர்த்தப்படவுள்ளார்.

விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ்( Marshal of the Sri Lanka Air Force) ஆகவும் பதவியுயர்த்தப்படவுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடந்த 2015 ஆம் ஆண்டு பதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்டிருந்தார்.

அவரது பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை காணப்படுகின்றன.

இந்த உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும்  நிகழ்வு நாளை (19) காலை 10 மணிக்கு கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது