ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (19) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும்.

ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) அறிவித்திருந்தது.