ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக தமது அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழழைப்பு விடுத்துள்ளது.

மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் ஆகியோருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளை (20) காலை 10 மணிக்கு வருகைதருமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைய எதிர்வரும் நவம்பர்  மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், 15,992,096 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.