பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த புகையிரத ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது லொகோமோட்டிவ் ஒபரேஷன் பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத ஓட்டுனர்கள், கட்டுப்பாட்டளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.