அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் முன்னெடுக்கப்படும்

பல்வேறு வேலைத்திட்டங்களின் மற்றுமொரு அம்சமாக, புதிய மும்மொழி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை  (20) மீரிகம பகுதியில் இடம்பெறவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு கௌரவமளிக்கும் வகையில்,  ‘தொன் ஸ்டீவன்’ எனப் இப் பாடசாலை பெயரிடப்படவுள்ளது.

இந்தப் பாடசாலையானது, மினுவங்கொட கல்வி வலயத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மும்மொழி பாடசாலையாக விளங்குகிறது.