திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறாத்தீவு கடலில் நீராடிக்கொண்டிருந்த வெ ளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

17 பேர் கொண்ட குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நெதர்லாந்து நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 10.55 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழ்ந்தவரின் குடும்பம் இம்மாதம் 14 திகதியே இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இறந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.