சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினமிரவிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்த ரயில்வே  ஊழியர்களின் நியம முறை போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இன்று காலை முதல் ரயில் சேவைகளை வழமை போல் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு மய்யத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.