தாமரை கோபுரம் நிர்மாணப் பணிக்காக கிடைத்த முற்பணம் முழுவதுமாக குறித்த வேலைத்திட்டத்திற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாக எலிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு தாமரை கோபுரம் வேலைத்திட்டத்தில் தமது நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு சீ.ஈ.ஐ.ஈ.சி நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்திற்கு வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அந்த சீ.ஈ.ஐ.ஈ.சி நிறுவனத்திற்கு தாமரை கோபுரம் வேலைத்திட்டம் தொடர்பில் தனியாக செயற்பட அனுமதி அளிக்கப்பட்டதாக எலிட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்திற்காக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் ஒரு கோடியே 56 இலட்சத்து 44 ஆயிரத்து 980 டொலர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு சீ.ஈ.ஐ.ஈ.சி நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்கு முற்பணமாக செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பணம் முழுவதும் தாமரை கோபுர திட்டத்திற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாக எலிட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.