மக்கள் விரும்பினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநயாக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என்று, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

ஒரு நாட்டின் அரசியல் விவகாரத்தில் மக்களின் தீர்மானமே முக்கியமானது என்றும் இது வரை காலமும் மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை சிறந்த முறையில் ஆற்றியுள்ளதாகவும் இனியும் தன்னால் முடிந்த சேவைகளை மக்களுக்காகத் தொடரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் ஆனால், மக்களின் வேண்டுகோளின் பேரில் மாத்திரமே அரசியலுக்குள் பிரவேசிப்பதாகவும் அவர் கூறினார்.