தேசிய பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு முன்னெடுத்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் தற்போது 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைப் பதிவுசெய்வதற்காக அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.