ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் 10 ஆம் திகதிவரையில் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலத்தில் நேற்று(21) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகளுக்கு விசேடப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது