கட்டுநாயக்க மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (24) காலை 8.30 துடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 272 தசம் 3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக விமான நிலைய வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் பெய்துவரும் அடை மழையை பொருட்படுத்தாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் விமான நிலையத்தை அண்டிய பகுதியில் உள்ள தடுகம் ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அந்த பகுதியில் சிறிதளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட எதிர்பார்த்துள்ள அனைத்து பயணிகளையும் மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னரே விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய அதிகாரிகள் கேட்டுள்ளனர்.