விழிநீர் அஞ்சலி – அமரா் திருமதி செல்வராசா சவுரிஆச்சி அவர்கள்-

மலர்வு- 30.05.1918 உதிர்வு- 24.09.2019

மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும், வவுனியா கங்கங்குளத்தை வாழ்விடமாக கொண்டவரும், கழக உறுப்பினர்களான அமரா் தோழர் ராசன் அவர்களின் தாயாரும், அமரா் தோழர் தாவிது அவர்களின் சகோதரியும் அமரா் தோழா் கிருஸ்ணா அவர்களின் பாட்டியுமான திருமதி செல்வராசா சவுரிஆச்சி அவர்கள் இன்று (24.09.2019) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் எங்களின் ஆழ்ந்த துயரையும் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)