ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக 6 அலவலக புகையிரதங்கள் மாத்திரமே இன்று (26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், குறித்த பணி பகிஷ்கரிப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது