சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின் புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று (25) விஜயம் ஒன்றை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சென்ற தூதரகத்தின் தூதுவர், சுவிஸ் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் சுவிஸ் தூதரகத்தின் அரசியல் பிரிவிற்கான தலைமை பிரதிநி ஆகியோர் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இச் சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திகளின் நிலைப்பாடுகள், அரசியலின் நிலைப்பாடுகள், பொருளாதார நிலைப்பாடுகள், நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.