பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள் பல இன்றைய தினத்தில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதற்கமைய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இதுவரையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 22 வருடங்ளுக்கும் மேலாக நிலவும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்னிலைபடுத்தி ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேபோல் அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கினன்றது.

இந்நிலையில் தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் ஒப்புக் கொண்ட தீர்வை வழங்காவிட்டால் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச தாதியர்கள் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்