5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (26) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும்.  கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும்.

இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையம், தேசிய கட்ட ஆய்வு நிறுவகம், தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் J.J. இரத்னசிறி இது தொடர்பில் சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளார்.