ஜோர்தான் அரசாங்கம் இவ்வருடத்தின் இரண்டாவது பொதுமன்னிப்பு காலத்தினை அறிவித்துள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
இந்த பொதுமன்னிப்பு காலம் செப்டம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இரண்டு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலப்பகுதியினுள் ஜோர்தானுக்கு தொழில் விசாவில் சென்று விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்கள் எவ்வித அபராதமும் செலுத்தாமல் தாயகம் திரும்பும் வாய்ப்பு உள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், விசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருக்கும் வௌிநாட்டவர்கள் அபராதத் தொகை ஒன்றை செலுத்தி அந்நாட்டில் இருந்து வௌியேற முடியும் என வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடத்தின் பெப்ரவரி மாதம் ஜோர்தான் அரசாங்கம் பொதுமன்னிப்பு காலம் ஒன்றை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது