இம் முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பொழுது தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளினால் ஏதேனும் தடை இடம்பெறுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய மற்றும் சர்வதேச தொடர்பு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களினால் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதற்கு தடை ஏற்படுமாயின் அதற்கு பொறுப்பான அலைவரிசைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் அலைவரிசைகளுக்கு பணம் செலுத்தி தேர்தலுக்கு அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடிய கூற்றுக்கள் அல்லது கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்