இலங்கை மீனவர்கள் ஐவருடன் காணாமல் போன நிஷாதி – 2 என்ற மீன்பிடி படகு மியன்மார் கடல் எல்லைப்பகுதியில் இருந்து அந் நாட்டு கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த படகு குடாவெல்ல மீன்ப்பிடி துறைமுகத்தில் இருந்து சென்றுள்ளது.

படகு சென்ற பின்னர் சில தினங்களுக்குப் பின்னர் அதன் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படகு செயலிழந்துள்ளது.

பின்னர், அனைத்து தொடர்பாடல்களும் துடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீன்ப்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் அவசர மற்றும் நடவடிக்கைப் பிரிவினருடன் இருந்து வந்த அனைத்து தொடர்புகளும் தடைப்பட்டன.

இதன் பின்னர் இந்த பிரிவு இந்துமா சமுத்திர வலையத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த படகு காணாமல் போனமை குறித்து அறிவித்துள்ளது. பின்னர் கடந்த 24 ஆம் திகதி மியன்மார் கடல் எல்லைப்பகுதிக்குள் இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மீனவர்கள் மியன்மார் கடற்படையினரின் பொறுப்பின் கீழ் உள்ளனர். இவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிகை மேற்கொள்ளப்பட்டிப்பதாக மீன்ப்பிடி மற்றும் நீரியல் வள பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்