நாடளாவிய ரீதியில் அணைத்து இன,மத,மொழி மக்களுக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்யுமாறு கோரி,

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், கையெழுத்து வேட்டை நேற்று (27) காலை மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், அதன்  ஒருங்கிணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச ரீதியில் நடைமுறையில் உள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை தொடர்பான சட்டங்களை தேசிய ரீதியில் நடை முறைப்படுத்துவதுடன் அபிவிருத்தி, அனைத்து  மக்களுக்கும் பொதுவாக நிகழ வேண்டும், முறையற்ற கருத்திட்டங்களால் மக்களின் வாழ்வதற்கான உரிமை இரத்துச் செய்யப்படுமாயின் அது தொடர்பாக அரசங்கம் சிந்திக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த கையெழுத்து வேட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்படும் கையெழுத்துகள் அனைத்தும் கோரிக்கையாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.