இலங்கை நிர்வாக சேவை சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. 
அமைச்சரவை உபகுழுவுடன் நாளைய தினம் இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணிகள் இடம்பெறவிருப்பதினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் உள்ளிட்ட நிர்வாக சேவைப் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சரவை துணைக்குழுவுடன் நாளை இடம்பெறும் பேச்சுவார்த்தை மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தமது சம்பள முரண்பாடு தொடர்பில் சாதகமான பெறுபேறு கிட்டும் என்றும் அரச நிர்வாக சேவை சங்கம் எதிர்பார்ப்பதாக பிரசாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)